Ad Widget

யாழில் வேட்பாளர்கள் இருவர் மீது தாக்குதல்

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

auto-fire

இச்சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது. பூட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறித்த வேட்பாளர் பயணம் செய்ய முச்சக்கரவண்டியும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த வேட்பாளர்கள் இருவரும் நேற்றிரவு வேலணை மண்கும்பான் பகுதியில் இறுதிப்பிரச்சாரப் பணியை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்தகொண்டிருந்த சமயம் பண்ணைப்பாலத்தில் கூரிய ஆயுதங்களுடன் மறைந்திருந்த இனந்தெரியாத இவர்கள் மீது தாக்குதல் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.

நிலமையைப் சுதாகரித்துக்கொண்ட முச்சக்கர வண்டிச் சாரதி அவ்விடத்தில் நிறுத்திய சாரதி கல்வீச்சுக்கு உள்ளாகிய நிலையில் அவ்விடத்தை விட்டு பின்புறமாக ஓடிவிட்டார்.

முச்சக்கர வண்டியை நெருக்கிய நபர்கள் முச்சக்கர வண்டிக்குள்ள இருந்த வேட்பாளர்கள் மீது பொல்கள், இரும்பக்கம்பிகள், வாள் என்பவற்றைக்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இவர்கள் பயணம் செய்ய முச்சக்கர வண்டியும் பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர்.

வேட்பாளர்களான சுவாமிநாதன் பிரகலாதன்,கனகசுந்தரம் தேசரஜீவ், ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்ணைப்பாலத்திற்கு செல்லும் வீதி மற்றும் மண்டைதீவுச் சந்தி ஆகியவற்றில் இராணுக் காவரலண் அமைந்துள்ளதால் தாக்குதல் நடத்திய நபர்கள் படகு மூலம் வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த முச்சக்கர வண்டிச் சாரதி தெரிவித்துள்ளார்.

இதில் ஒரு வேட்பாளர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் மற்றய வேட்பாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்பில் யாழ் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்தில் வந்த ஆணையாளர் நிலைமைகளை நேரில் பார்வையிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts