கிளிநொச்சி – சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
சுன்னாகத்தில் அமைந்துள்ள உபமின்நிலையத்தில் மேற்படி நிகழ்வு நேற்றய தினம் இடம்பெற்றது.
முன்பதாக பிரதான வாயிலை வந்தடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்திரா வன்னியராட்சி வரவேற்றார்.
ஜனாதிபதி அவர்கள் நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்து வைத்ததுடன், கிளிநொச்சி சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டம் தொடர்பில் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த செயற்திட்டத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்தவாறே கணனி மூலமாக ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இச்செயற்திட்டத்தின் ஊடாக யாழ்.குடாநாட்டிற்கு 24 மணிநேர மின்சாரத்தை எவ்விதமான தடையுமின்றி மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். சுன்னாகத்தில் 1800 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கும் உபமின்நிலையத்தை மக்களிடம் கையளித்த இந்தநிகழ்வில் வடக்கையும் தெற்கையும் தேசிய மின்வலையமைப்பில் இணைந்து கொள்ளும் வகையில் இந்த மின்உபமின்நிலையம் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
2009 ம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்ககளுக்கு உதவும் வகையில் அமுல்படுத்தப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டம் மூலம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்கள் மின்சாரத்தை பெற்று வருகின்றனர்.
இக்கருத்திட்டத்தின் மூலம் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மின்தொகுதிகளை ஒன்றிணைந்து தனியொரு தொகுதியாக மிளிரச் செய்வதற்கென கிளிநொச்சி முதல் சுன்னாகம் வரை நிர்மாணிக்கப்பட்ட 132 மேகா.வோற் உயர்அழுத்த மின் அனுப்புகை வழி மற்றும் சுன்னாகம் மின்விநியோக உபநிலையம் என்பன மக்கள் மயப்பட்டிருந்தப்பட்டிருக்கும் அதேவேளை இதனூடாக சிறுகைத்தொழில்துறை, மாணவர்களின் கல்வி, உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பாடு அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்கான நிதியுதவியினை இலங்கை அரசாங்கம், ஆசியா அபிவிருத்தி வங்கியும் வழங்கியிருந்தன.
நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள், பிரதிநிதிகள், படைத்துறை மற்றும் இலங்கை மின்சார நிலையத்தின் அதிகாரிகள், திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் என பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.