தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க தெரிவித்தார்.
கொடிகாமம் நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த வேளையிலேயே குறித்த நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டதாகவும், 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இவர்கள், வடமாகாண சபை தேர்தல் பிரசாரத்தினை மேற்கொள்வதற்காக வீடு மற்றும், வர்த்தக நிலையங்களில் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக அவர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.