வடக்கில் தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்று வருவதாக ட்ரான்பெரன்சி இன்ரநசினல் அமைப்பு, தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
அதன்படி தேர்தலில் பொதுச் சொத்துக்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலுக்காக அரச ஊழியர்களும் சொத்துக்களும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கான எழுத்து மூல ஆவணங்களும், புகைப்பட ஆதாரங்களையும் குறித்த அமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் சமர்பபித்துள்ளது. அதற்கமைய வட மாகாண ஆளுநர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார மேடைகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் 500ற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் ஆளும் கட்சி பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.