யாழ் பல்கலைக்கழகத்தில் நூல்கள் கொள்வனவுசெய்யப்பட்டது தொடர்பில் பல லட்சம் ரூபா கையாடல் செய்யப்படிருப்பதாக தெரியவந்துள்ளது.கொள்வனவு செய்யப்படாத புத்தகங்களுக்காக பல லட்சம் ரூபா பணம் நிறுவனம் ஒன்றிற்கு காசோலையால் செலுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாண்டுக்கான புதிய கொள்வனவுக்கு விண்ணப்பித்த வேளையில் முன்னரேயே இவ்வாண்டில் கொள்வனவு நடைபெற்றிருப்பதான பதிவுகள் காணப்பட்டதனால் அவற்றினை உறுதி செய்ய முற்பட்ட வேளையில் இந்த மோசடி தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் நிதிக்கிளை ஊழியர் ஒருவர் பெரியளவில் சம்பந்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான முறைப்பாடு பொலிசாரிடம் செய்யப்பட்டிருப்பதாகவும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இது நிதி மோசடி என்பதனால் விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பல்கலைக்கழகத்திற்கெதிராக அநாமதேய முகப்புத்தக கணக்கு ஒன்றினை பேணிவந்தது தொடர்பிலும் மேற்படி ஊழியர் சந்தேகிக்கப்படுவதாகவும்.இது தொடர்பிலும் விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இதுவரையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.