வடக்கில் 40 புதிய ‘நெனசல’ அறிவகங்கள்

NENASALA-LOGOவட மாகாணத்தில் புதிதாக 40 ‘நெனசல’ அறிவகங்களை நிறுவுவதற்கு இக்டா (ICTA) என்று அழைக்கப்படும் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுரைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அமைப்பக்கப்பட்டவுள்ளன.

இந்த 40 புதிய ‘நெனசல’ அறிவகங்களுள் முதல் 20 ‘நெனசல’ அறிவகங்கள் அடுத்த இரு வாரங்களில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் என இக்டாவின் (ICTA)தலைவரும் பேராதனை பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் பீ. டப்ளியூ.ஆபாசிங்ஹ தெரிவித்தார்.

இந்த ‘நெனசல’ அறிவகங்களை தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார்.

நாட்டில் சமாதானம் உண்டாகி பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் கூடிய அளவு மக்களுக்குத் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவது இந்த புதிய ‘நெனசல’ அறிவகங்களை நிறுவுவதின் நோக்கம என அவர் குறிப்பிட்டார். தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 699 ‘நெனசல’ அறிவகங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts