யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமான ஆலயமாக விளங்குவது நல்லூர்க் கந்தன் ஆலயமாகும். நிர்வாகம் முருகன் வெளிவீதியுலா வரும் போது கூட முருகனுக்கு அருகில் எந்த ஆண்களும் மேலாடையுடன் வரக்கூடாது என பல கோவில் அடியாட்கள் மூலமாக தெரிவித்து அருகில் நிற்கக்கூட விடுவதில்லை.அதை அவர்கள் தெரிவிக்கும் முறையினால் பலர் அசளகரியத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகி உளத்தாக்கத்தின் காரணமாக கோவிலுக்கே வராமல் விட்ட சம்பவங்களும் நிறைய அரங்கேறியுள்ளன.
இந்து சமயத்தில் சாமி ஊர்வலம் வருவது ஏனெனில் கோவிலுக்கு வருவதற்கு முடியாமல் உள்ள நோயாளிகள், மற்றும் மாதவிலக்கான பெண்கள், கர்ப்பிணித்தாய்மார், தீண்டக்கூடாதவர்கள் என அந்தக் காலத்தில் கருத்தில் எடுக்கப்பட்ட மக்கள், கோவிலுக்கு வரமுடியாது உள்ள போர் வீரர்கள் மற்றும் ஏராளமானவர்களுக்காகவும் வேறு சில நன்மைகளுக்காகவுமே என கூறப்படுகிறது.
இந்நிலையில் நல்லூர் கோவிலில் வைத்த மதிப்பையும் பக்தியையும் அடியவர்களின் மனதில் இருந்து அகற்றும் வேலையில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. நல்லூர்ச் சட்டம் மேலாடையுடன் உள்ளே ஆண்கள் செல்லக் கூடாது என்பது. அந்தச் சட்டத்தை இலங்கை ஜனாதிபதி கூட மதித்துள்ளார். நல்லூரை தரிசிக்க வந்த ஏனைய அமைச்சர்கள் பிரமுகர்கள் கூட மதித்துள்ளார்கள். ஜனாதிபதி மேலாடை இன்றி நல்லூர் கோவிலுக்குள் நுழைந்ததைத பார்த்து ஏராளமானவர்கள் நல்லூர் முருகனிடத்திலும் நிர்வாகத்திலும் பெருமதிப்புக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் நல்லூர் பிரதான மண்டபத்தினுள் காலணியுடன் பொலிசார் நின்றிருந்ததைக் ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது. இது தொடர்பிலான செய்தி
இன்று தீர்த்த உற்சவத்தில் மேலாடையுடன் கோவிலுக்குள் தீர்த்தக் கேணி பகுதியில் நின்றிருந்தனர் பொலிசார். இது மட்டும் எப்படி முடிந்தது. பொலிஸ் நல்லூர்க் கோவிலுக்குள் மேலாடையுடன் செல்லலாம் என்றால் இந்து மதம் அதற்கு விதி விலக்கு அளிக்கின்றதா? என அடியவர்கள கேள்வி எழுப்புகின்றனர்.விடுதலைப்புலிகளின் காலத்தில் இயங்கிய காவல் துறையினர் அடியவர்களுடன் அடியவர்களாக பாரம்பரிய உடையில் கடமை புரிந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்று யாழ் பொலிசார் தீர்த்தக் கேணிக்கு அருகில் நின்று பக்தர்களை காணொளியாகவும் எடுத்துள்ளார்கள். கோவில் தீர்த்தக் கேணிக்குள் பக்தர்கள் இறங்குவது புனிதத்தைக் கெடுக்கும் என நினைக்கும் நிர்வாகம் பொலிசார் உள்ளே மேலாடையுடன் வந்ததை எவ்வாறு கணக்கில் வைத்துள்ளது என அடியவர்கள் வினா எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை.
இது குறித்து நிர்வாகம் விளக்கமளிக்குமா?
படங்கள் : NEWJAFFNA இணயத்தளம் -நன்றி