தனது மகனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் வைத்தியருந்த தாய்க்கு வைத்தியர்கள் எனிமேல் சிகிச்சை பலன் தரப்போவது இல்லை எனவும் மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்ததனால் மனமுடைந்த தாய் மகன் இறக்க முன்னர் தனது உயிரைமாய்த்துக் கொண்ட சம்பவம் வடமராட்சியில் சோகநிலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் அவரது மகனான பருத்தித்துறை மேலதிக காணிப்பதிவாளரும், ஈ.ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வேட்பாளருமான கந்தசாமி இளங்கீரன் காலமானார்.
சிறிதுகாலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது வடமராட்சி கட்டைவேலியை பிறப்பிடமாகக் கொண்ட கந்தசாமி பஞ்சாட்சரம்மாவின் மகன் கந்தசாமி இளங்கீரன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை சிகிச்சை பலனின்றி வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு வைத்தியசாலை தெரிவித்திருந்தநிலையில் அதனை கேள்வியுற்ற தாயார் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் நேற்றைய தினம் மகன் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விருவரது பூதவுடல்களும் இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.