யாழ். மின்சார நிலைய வீதியில் தரிக்கப்படும் தனியார் சிற்றூர்திகள் தமது சேவையினை நிறுத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இ.போ.ச நடத்துநர் ஒருவர் தாக்கப்பட்டதனையடுத்து குறித்த பகுதி சிற்றூர்திகள் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது . அதனையடுத்து மின்சார நிலைய வீதியில் தரிக்கப்படும் உள்ளூர் தனியார் பேரூந்துகளை அகற்றுமாறு பொலிஸார் அறிவித்ததையடுத்து குறித்த உள்ளூர் சேவைகளை நிறுத்தி தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இதன்படி நேற்று நண்பகல் 12 மணியில் இருந்து கொடிகாமம், மாதகல், குறிகட்டுவான், பருத்தித்துறை ஆகிய சிற்றூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நடவடிக்கையினையடுத்து இ.போ.ச சேவை வழமைக்கு திரும்பியது
பொலிஸாரின் நடவடிக்கையால் மின்சார நிலைய வீதியில் தரித்து நிற்கும் அனைத்து தனியார் போக்குவரத்து பஸ்களும் அகற்றப்பட்டமையினையடுத்து இ.போ.ச ஊழியர்களது போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை எடுப்பதுடன் மின்சார நிலைய வீதியில் இருந்த சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களையும் உடனடியாக முற்றவெளிக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து பஸ்களும் அகற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து இ.போ.ச சேவை வழமைக்குத் திரும்பியதுடன் நிறுத்தப்பட்டிருந்த உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்குமாக யாழ்ப்பாணத்தில் இருந்து 50 பயண வழிப்பாதைகளுக்குமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி
இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல்: பஸ் சேவை நிறுத்தம்