பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வீதிகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என வேட்பாளர்களிடம் கோருவதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்திநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் செப்ரெம்பர் 21 திகதி நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்சி வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் வீதிகளைப் பயன்டபடுத்தி வருகின்றனர். இது தேரத்ல் சட்டத்திற்கு முரணானது அதன்படி பொலிஸாரது நடவடிக்கை என்ன என வாராந்த செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீண்ட காலங்களின் பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வீதிகளை கட்சிகள் அசிங்கப்படுத்தி வருகின்றனர். எந்தக் கட்சியாக இருந்தாலும் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை விடுத்து அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இது தேர்தல் சட்டத்தினை மீறும் செயற்பாடாகும். இவ்வாறு கட்சிகளால் எழுதப்பட்டவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்ட்டு வருகின்றது. அதற்கான ஆளணியினரையும் தருமாறு கேட்டுள்ளோம். அத்துடன் வீதிகளில் எழுதப்பட்ட வேட்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.