நல்லூரில் கைத்தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி

nallur-shopநல்லூர் உற்சவத்தை முன்னிட்டு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் தொடர்பான கண்காட்சியும், விற்பனையும் இன்றிலிருந்து எதிர்வரும் 5 ம் திகதி வரை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

கைத்தொழில் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளத இக் கண்காட்சியினை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையிட முடியும்.

மேலும் இக் கண்காட்சியில் இலங்கைத் தொழில் அபிவிருத்தி சபை, வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கம், தேசிய அருங்கலைகள் பேரவை, தேசிய வடிவமைப்பு, பனை அபிவிருத்தி சபை ஆகியன தமது முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன.

Related Posts