தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன் அதற்காக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பட்டதாரி ஆசிரியர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டு அவ்விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பின்பு சிறந்த தகைமை கொண்ட பட்டதாரிகளுக்கு இந்நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மூன்றாம் தவணைக்காக பாடசாலைக்கள் ஆரம்பிக்கப்படும்போது இப்புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் பற்றாக்குறையாக காணப்படும் பாடங்களுக்கான 850 ஆசிரியர்கள் சேவையில் அமர்த்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.