வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான பணிகளை துரிதப்படுத்துக; ஜனாதிபதி

mahinda_rajapaksaவடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை துரிதப்படுத்தி போக்குவரத்தினை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை மிகவிரைவில் பூர்த்தி செய்வதன் ஊடாக வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான போக்குவரத்து சேவைகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும் துரித கதியில் பயணங்களை மேற்கொள்வதற்கும் மிகவும் இலகுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் ஏனைய மாகாணங்களை விட வடக்கில் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts