வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்தே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவு செய்யும் நோக்கில் 43 லட்சத்து 58 ஆயிரத்து 261 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.