வடமாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈ.பி.டி.பி) முதன்மை வேட்பாளராக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசகர் சின்னத்துரை தவராசா போட்டியிடவுள்ளார்.ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், சீறிரெலோ கட்சியும் போட்டியிடுகின்றன.
இதன்பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக சின்னத்துரை தவராசாவும் போட்டியிடவுள்ளார். அத்துடன் யாழ்.மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்கள் சார்பில் போட்டியிடவுள்ள நிலையில் முதன்மை வேட்பாளரான தவராசா ஜனாதிபதி செயலகத்திற்கு நேற்று சென்று வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
இதனிடையே யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் கையொப்பங்கள் இட்டுள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கிளிநொச்சி முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் கையொப்பங்கள் இட்டுள்ளனர்.
பலராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஈபிடிபி கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் சிலரது பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசகர் சின்னத்துரை தவராசா
வடக்கு கிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சு முன்னாள்செயலாளர் சுந்தரம் டிவகலாலா
சிகரம் கல்வி – தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் இயக்குனர் ஊடகவியலாளர் றுஷாங்கன்.
கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன்
வட கடல் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் மாஸ்ர்.
சூசைமுத்து அலெக்சாண்டர்
ஐயாத்துரை ஸ்ரீரங்கன்
சிவகுரு பாலகிருஷ்ணன்
பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இருந்த தவராசா
இறுதி வேட்பாளர் பெயர் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.