யாழ் மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த யாழ் மாவட்டத்தின் நிலமை அண்மைக்காலத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.மேற்க்கண்டவாறு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அபிவிருத்திப் பணிகளை அறிகையிடல் சம்பந்தமான ஒரு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஊடகத்தினைக்களத்தினால் நடத்தப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெற்குக்கும் வடக்குக்கும் இடையே போக்குவரத்து பாதை சரி செய்ததன் மூலம் யாழ் மாவட்ட விவசாயிகள் கடற்தொழிலாளாகள் அதிக நன்மை அடைந்துள்ளார்கள்.
குறிப்பாக கடந்த காலத்தில் பின்தங்கி இருந்த விவசாய உற்பத்திகள் அதிகரித்துள்ளதுடன் வெங்காயத்தின் உற்பத்தியானது அதிகரித்துள்ளதுடன் மீன்பிடி உற்பத்திப் பொருட்களும் அதிகதித்துள்ளன.
யாழ் மாவட்டத்தில் தற்போது எண்பத்திநான்கு வீதமான மக்கள் மின்சாரத்ததை பெற்றுள்ளார்கள் ஏனைகயவாகளும் இந்தாண்டுக்குள் மின்சாரத்தை நூறு வீதமும் பெற்றுக் கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.
வடக்குக்கும் தெற்க்குக்கும் இடையே சிறந்த போக்குவரத்து வீதி அமைக்கப்பட்டதன் மூலம் தென்னிலங்கையில் இருந்தும் இதே பொன்ற வடக்கில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் அதிகரித்துள்ளன.
இது இனங்களுக்கு இடையேயான உறவை கட்டியெழுப்ப உதவியாக அமையும்.யாழ் மாவட்டத்தில் இடம் பெறும் அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் மக்களுக்காக செய்யப்படுகின்றன.இது மக்களை உரிய முறையில் சென்றமைவதுடன் அதனை மக்களும் அறிந்திருக்கு வேண்டும்.
இதற்க்கான நடவடிக்கைகளை ஊடகங்கள் நல்ல முறையில் மேற்க்கொண்டு வருகின்றன.இதனை மக்கள் அறிவதுடன் மாவட்டம் மாகாணம் தேசியம் சர்வதேசம் என அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.இதனை வெளிப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமையாகும்.
கடந்த காலங்களை விட தற்போது பெருமளவிலான அபிவிருத்தியை நாம் அடைந்துள்ளோம். இலங்கையில உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தியன் அளவை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவும் குறிப்பிட்டார்.