நாளை வலி.வடக்கில் தொழிற் சந்தை!

Job_Logoவலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த தொழில்தேடும் இளைஞர், யுவதிகளுக்கான பிரதேச தொழிற்சந்தை நாளை(26.07.2013) வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு வலிகாமம் வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிறுவனங்கள் தொழிற்சந்தையில் பங்குபற்றவுள்ளதால், தொழில்தேடும் இளைஞர் யுவதிகளை தவறாது கலந்துகொண்டு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.

Related Posts