யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யும் காலப் பகுதயில் குழப்ப நிலைகள் ஏற்படுவதினை தவிர்க்கும் முகமாக இந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபை தேர்தல் முடிவடையும் வரை இந்த சோதனை சாவடி செயல்படவுள்ளது.
தொடர்புடைய செய்தி