போரின் போது உயிரிழந்தவர்கைள விடவும் போதைப் பொருள் பயன்பாட்டினால் அதிகளவானர்கள் உயிரிழப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே போதைப் பொருள் இல்லாதொழிப்பு நடவடிக்கைகளை பொதுபல சேனா அமைப்பு ஆரம்பிக்க உள்ளதாக அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
போதைப் பொருள் பூமியாக மாற்றமடைந்துள்ள கொலன்னாவ பிரதேசத்திலிருந்து இந்த போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
போதைப் பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் முஸ்லிம் கடும்போக்காளர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதனால், 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் ஆபத்தான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.
ஷாரிய சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இயங்கி வருகின்றன. இது தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.
நீதிமன்ற நிர்வாகப் பணிகளில் ஒன்றான தோளுக்கு முதலி என்னும் பதவிக்காக இந்த ஆண்டு 65 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இதில் 51 பேர் முஸ்லிம்கள் அதிலும் 37 பேர் முஸ்லிம் பெண்களாவர். நாட்டின் சட்டம் ஒழுங்கு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.