யாழில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
இந்தியா, சென்னையைச் சேர்ந்த வித்தியா என்ற திருநங்கையே இவ்வாறு யாழில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
இவர் இதன்போது, தனிநாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
“திருநங்கையான நான் யாழில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டு தனிநாடகம் ஒன்றை அரங்கேற்றியமை குறித்து மகிழ்ச்சிடைகின்றேன்.
தமிழ் மக்களுக்காக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களில் நானும் கலந்துகொண்டிருக்கின்றேன். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் இந்த பிரதேசத்தையும் காணக்கிடைத்தது என் வாழ்நாளில் மிகமுக்கியமான நிகழ்வாகும்.
கொழும்பில் இருந்து நாங்கள் வருகின்ற போது யுத்தம் நடைபெற்ற இடத்தினைக் காட்டினார்கள். பார்க்கும்போது மனதிற்கு கவலையாக இருந்தது. இருந்தும் அழிவுகளை எல்லாம் மாற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுப்படுவதாக கூறினார்கள். அதனை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருந்தது.
அத்துடன் இந்தியாவில் உள்ள திருநங்கைகளின் நலனுக்காக நான்குரல் கொடுத்து வருகின்றேன். இவர்கள் பிச்சையெடுப்பதையும் பாலியல் தொழிலையும் பிரதானமாக கருதி ஈடுபட்டு வருகின்றனர். நான் தற்போது முழுநேர நாடகக் கலைஞராகச் செயற்பட்டு வருகின்றேன். இதற்காக அமெரிக்க நாட்டின் புலமைப்பரிசில் எனக்கு கிடைத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளேன்’ என்று தெரிவித்தார்.