வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை போட்டியிடவைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றின் சட்டத்தணி ஒருவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.
இந்த இரண்டு முன்னாள் போராளிகளில்; தமிழரசுகட்சி சார்பாக ஒருவரும் ரெலோ அமைப்பின் சார்பில் ஒருவருமாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கிறன.
ஏற்கெனவே, விடுதலைப்புலிகளின்; ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் சுதந்திரக்கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக்;கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையிலேயே கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரையும் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது தனது வேட்பாளர் பங்கீட்டு விபரத்தை வெளியிட்டுள்ளது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தை தவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்…
கிளிநொச்சி
தமிழரசுகட்சி 3
தமிழர்விடுதலைக்கூட்டணி 2
ரெலோ 1
ஈபி.ஆர். எல். எப் 1
முல்லைத்தீவு
தமிழரசுகட்சி 2
ரெலோ 2
ஈபி.ஆர். எல். எப் 2
புளொட் 1
தமிழர்விடுதலைக்கூட்டணி 1
வவுனியா
தமிழரசுகட்சி 2
புளொட் 2
ரெலோ 2
ஈபி.ஆர். எல். எப் 3
மன்னார்
தமிழரசுகட்சி 2
புளொட் 1
ரெலோ 3
ஈபி.ஆர். எல். எப் 2