வேடர்களின் தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோவுக்கு முக்கிய பிரமுகர் (வி.ஐ.பி.) அந்தஸ்தை அளித்துள்ள அரசாங்கம், அவருக்கான உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றையும் அளித்துள்ளது.
குறித்த வாகனம் தற்போது மஹியங்கனை பிரதேச செயலக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், வேடர்களின் தலைவர் பயணங்களை மேற்கொள்ளும்போது இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக அவருக்கு நாளொன்றுக்கு 200 லீட்டர் வரையான பெட்ரோல் ஒதுக்கப்படுகிறது.
மேலும் வாகனத்தை செலுத்துவதற்கு ஒரு சாரதியும் எந்த நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் வேடர்களின் தலைவர் வன்னிலத்தோ, இனிவரும் காலங்களில் நாட்டின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக மாற்றம் பெற்றுள்ளார்.
அரச அலுவலகங்களிலும் அவருக்கான மரியாதை கிடைக்கும் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது