இதுவரை காலமும் வடக்கு பிரதேச மக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவும் அளிக்கவுமில்லை, ஒரு சந்தர்ப்பத்தை கூட வழங்கவுமில்லை. இம்முறையாவது வட மாகாண சபைத் தேர்தலிலாவது வடக்கு பிரதேச மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினால் நாம் மக்களின் எதிர்கால நலன்கருதி தேவையானதை செய்வோம் என்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் இந்த விடயம் குறித்து தெரிவிக்கையில்
யுத்தம் முடிவடைந்த பின்னர் கூட வடக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் மேலும் வடக்கு மக்களுக்கு சேவை செய்யவும் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் ஊடாக வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
ஆனால் நீங்கள் சில அரசியல் கட்சிகளின் இரத்தத்தை சூடாக்கும் பேச்சுக்களுக்கு அடிபணிந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றர்கள் இதனால் உங்களது தேவைகள் பூர்த்தியாக்கப்படுகின்றதா இல்லை அதனால் தான் இம்முறையாவது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். எமது பக்கத்தில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவும் தயாராகவே இருக்கின்றோம். எனவும் அவர் தெரிவித்தார்.