தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சண்முகம்பிள்ளை பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரமளித்ததன் பின்னர் அவருக்கான நியமனக்கடிதத்தை இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருவினால் வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை நிருவாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர் நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
115 வருட வரலாற்றினைக் கொண்ட தொழில்நுட்ப பயிற்சி திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ் அதிகாரி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் 39 தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.