கிணற்றில் வீழ்ந்து ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் தாவடியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
தாவடியைச் சோந்த ஸ்ரீஸ்கந்தராசா கேசினா என்ற 1 குழந்தையே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளது.
குழந்தையின் தாயார், குழந்தையை பாட்டியின் பராமரிப்பில் விட்டுவிட்டு தோட்ட வேலைக்குச் சென்றதாகவும் இதன்போதே குழந்தை கிணற்றில் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2006 ஆம் ஆண்டும் இந்த பெற்றோர்களின் 4 வயது ஆண் பிள்ளையொன்றும் இதேபோன்று கிணற்றில் தவறிவீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.