காணாமல் போனவர்கள் கதை முடிந்தது… முடிந்ததே… அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார்.
வடமாகாணசபை தேர்தலில் சுதந்திரக் கட்சிசார்பில் போட்டியிடவுள்ள தயாமாஸ்டர் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
முன்னாள் போராளிகள் பலர் யுத்தத்தின் முடிவில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போயிருக்கின்றனர் என கேட்டபோதே தயாமாஸ்டர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் காணாமல் போனவர்களுடைய பிரச்சினையில் யாரும் எதுவுமே செய்ய முடியாது. அது எங்கள் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டிருக்கின்றது.
எனவே நடந்தவைகள் தொடர்பில் தொடர்ந்தும் பேசி கொண்டிருப்பதில் எந்தவிதமான பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை. எனவே முடிந்தது முடிந்ததே எனக் குறிப்பிட்டார்.
மேலும் முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள், விடுதலைக்காக அரசாங்கத்துடன் இணக்க அரசியல் அல்லாத இணங்கும் அரசியலை தான் செய்யப் போவதாகவும், இதனை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்ற போதே தான் விளக்கமாக எடுத்துக் கூறியிருப்பதாகவும், அதனை அங்கீகாரத்தைப் பெற்று தொடர்ந்தும் செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.