ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சுதர்சிங் விஜயகாந்தை கட்சியினது அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குற்றச்செயல்கள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சுதர்சிங் விஜயகாந் மீதான விசாரணைகளை பொலிஸார் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு நாம் தடையாக இருக்க மாட்டோம் என்பதுடன், எமது கட்சி அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த நிலையில், அவர் கட்சி செயற்பாடுகள் அனைத்திலும் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான விசாரணைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்பீடம் ஆராய்ந்து முடிவெடுக்குமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் கைது