இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள் தரம் குறைந்தவை!

pills-medicenஇலங்கை வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துப் பொருட்கள் பலவும் தரம் குறைந்தவை என சுகாதார சேவை தொழிற்சங்க சம்மேளன முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது.

இலங்கையில் இறக்குமதி செய்யும் மருந்துப் பொருட்கள் தொடர்பில் உரியவர்கள் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக அம் முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

இவர்கள் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து பெருமளவான இலாபத்தை அடைவதாக அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இவ்வாறான தரம் குறைந்த மருந்துப் பொருட்களே டெங்கு நோயாளர்களுக்கும் வழங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts