யாழ்ப்பாணத்தில் போதை மருந்துகள் கிடைக்காத காரணத்தினால் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் யாழ்.கல்வியங்காட்டில் இடம்பெற்றுள்ளது.
புதிய செம்மணி வீதி கல்வியங்காட்டில் இடம்பெற்ற சம்பவத்தில் ச.பிரசாத் என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையான இவர், யாழ்.ஐந்து சந்திப் பகுதியிலுள்ள முஸ்லீம் போதை பொருள் வியாரிபாரிகளிடம் போதைப் பொருட்களை வாங்கி உட்கொண்டு வந்துள்ளார்.
தனிமையில் வசித்து வந்த இவரிடம், பணம் இல்லாத காரணத்தினால் குறித்த வியாபாரி போதைப் பொருட்களை வழங்கவில்லை.
இதனால் அதிருப்தியுள்ள இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.