போர் வேளையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் 11ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளன.
போரின் போது உயிரிழந்த, காயமுற்ற, சொத்தழிவு ஏற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், ஆயிரத்து 500 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் உடையோர் ஆகியோருக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
கொடுப்பனவு பெறுவதற்கு தென்மராட்சி பிரதேச செயலகம் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி 166 பேரின் விவரங்கள் புனர்வாழ்வு அதிகாரசபையினால் பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அவர்களில் உயிரிழந்த, காயமடைந்த 74 பேருக்கும் அரச உத்தியோகத்தர்கள் 25 பேருக்கும் ஆயிரத்து 500 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானமுடைய 67 பேருக்கும் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கான கடிதம் பிரதேச செயலகத்தினாலும், புனர்வாழ்வுஅதிகார சபையினாலும் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அவர்களுக்கான போக்குவரத்து, உணவு ஒழுங்குகள் யாழ்.செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கொடுப்பனவுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பயண ஒழுங்குடன் எதிர்வரும் 10ஆம் திகதி பி.ப.4 மணிக்கு யாழ். மாவட்டச் செயலகத்துக்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் இயலாமை காரணமாக பங்கேற்க முடியாதவர்கள் இது தொடர்பாக தத்தமது பிரிவு கிராம அலுவலருக்கு விண்ணப்பித்து பிரதேச செயல கத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.