மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் கலைக்கப்பட்டு வட மாகாண சபை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இம்மூன்று மாகாண சபைகளுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தேர்தல் நடாத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாகாண சபைகளை கலைப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு தனக்கு கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.