வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம்நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும், மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
06.07.2013 சனிக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் நவாலி, காக்கைதீவு, மூர்த்தவிநாயகர் கோவிலடி, கூழாவடி, சாவற்கட்டு, குளப்பிட்டி, ஆனைக்கோட்டை வீதி ஆகிய இடங்களிலும்,
07.07.2013 ஞாயிற்றுக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப்பிரதேசம், திருநெல்வேலிப்பிரதேசம், பட்டணப்பகுதி நீங்கலாக யாழ் மாநகர சபைப்பகுதி, ஸ்ரான்லி வீதி, புன்னாலைக்கட்டுவன், அச்செழு,ஈவினை, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, வல்லை, குஞ்சர்கடை ஒரு பகுதி, மண்டான் பிரதேசம், நவிண்டில், உடுப்பிட்டி, தொண்டைமனாறு, வல்வெட்டித்துறை, வல்வெட்டி, கரந்தன், சிறுப்பிட்டி, நீர்வேலி, கோப்பாய், இருபாலை, கல்வியன்காடு, நல்லூர், செம்மணி, நாவற்குழி, கைதடி, மறவன்புலோ, தச்சன்தோப்பு, மீசாலை, சாவகச்சேரியின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும்,
08.07.2013 திங்கட்க்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் அம்பன், குடத்தனைப் பிரதேசங்கள் ஆகிய இடங்களிலும், 10.07.2013 புதன்;கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் அம்பன், குடத்தனைப் பிரதேசங்கள் ஆகிய இடங்களிலும், மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.