விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இரு சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இரு சடலங்களையும் உரிமை கோருமாறு யாழ். போக்குவரத்து பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் யாழ். காங்கேசன்துறை வீதி மற்றும் நல்லூர் வீதியில் விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்த இரு சடலங்களையும் உறவினர்களை உரிமை கோருமாறு யாழ். பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.