தெல்லிப்பளையில் தேசிய அடையாள அட்டை வழங்க நடமாடும் சேவை

NIcஆட்பதிவு திணைக்களம் மற்றும் பப்ரல் அமைப்பு ஏற்பாட்டில் ஒப்பர் நிறுவனத்தின் அனுசரணையுடன் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை நேற்று திங்கட்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த நடமாடும் சேவையில் 500இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நடமாடும் சேவை மூலம் மக்கள் தங்கள் அடையாள அட்டை பெறுவதற்கு ஏற்ற வகையில் பிறப்பு அத்தாட்சி பத்திரம் வழங்கல், பொலிஸ் பதிவுகள், சமாதான நீதவானின் உறுதிப்படுத்தல்கள், மற்றும் கிராம அலுவலர்களின் உறுதிப்படுத்தல், புகைப்படம் எடுத்தல் என்று அனைத்து சேவைகளும் இதன் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தன.

யுத்தம் காரணமாக வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் ஆவணங்களை தவறவிட்டுள்ளனர். இந்த நடமாடும் சேவை மூலம் இதனைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சேவையினால் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 2,000இற்கு மேற்பட்ட மக்கள் நன்மை அடைவார்கள் என்று பிரதேச செயலர் சிறிமோகன் தெரிவித்தார்.

Related Posts