டெங்கு ஒழிப்பில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்

maleriya-mosquto-denkuதேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று ஜுலை 01 முதல் 07 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும். இவ்வருடத்தில் அனுஷ்டிக்கப்படும் இரண்டாவது நுளம்பு ஒழிப்பு வாரம் இதுவாகும்.

சுகாதாரம், கல்வி, அரச பாதுகாப்பு உள்ளூராட்சி, சுற்றாடல் அமைச்சுக்கள் ஒன்றிணைந்து இவ்வாரத்தில் பலதரப்பட்ட வேலைத்திட்டங்களை ஒழுங்கு செய்துள்ளன.

முப்படையினரும், பொலிஸ், சிவில் பாதுகாப்புப் பிரிவினரும் நுளம்பு ஒழிப்பு பணியில் பங்களிப்பு வழங்குவர்.

நுளம்பு ஒழிப்புப் பணியை தேசியப் பணியாகக் கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரச் செயலர் தலைமையிலான குழு 03 மாதங்களுக்கு ஒருமுறை அந்தந்த அமைச்சுக்கள் மேற்கொண்ட நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அகற்றக்கூடிய பலதரப்பட்ட பொருட்களையும் ஓரிடத்தில் தேக்கி வைப்பதால் டெங்கு குடம்பிகள் பெருகுவதாக அமைச்சின் அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுளம்பு ஒழிப்பு வாரத்தின் பின்னரும் அமைச்சுக்கள் வெவ்வேறான நுளம்பு ஒழிப்பு வாரங்களை ஏற்படுத்த வேண்டும். பாடசாலைகளிலும் வெள்ளிக்கிழமை தோறும் நுளம்பு ஒழிப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

இப்பணிகளில் சுற்றாடல் பொலிஸார், கிராம அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், பாடசாலை அபிமானிகள் ஆகியோரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளலாம்.

நுளம்பு ஒழிப்புப் பணியில் ஒன்றிணைந்து செயற்படுமாறு சுகாதார அமைச்சு நிறுவனத் தலைவர்களையும், பிரதான குடியிருப்பாளர்கள் உட்பட குடும்பத்தின் சகலரின் ஒத்துழைப்பையும் கேட்டுள்ளது.

Related Posts