அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தாக்கல் செய்யபட்டுள்ள நட்டஈடு கோரி, உதயன் பத்திரிகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திரை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயக் கட்சிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நற்பெயருக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டமைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவினால் யாழ். உயர் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மூன்று வழக்குகளும் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் இந்த வழக்குகளை காசுக்காக போடவில்லை அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளிடப்பட்டமைக்கு எதிராகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவை தொடர்பில், உதயன் நிர்வாகம் அமைச்சருடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு செல்லவேண்டும் என்று நீதவான் தெரிவித்துள்ளார்.
வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்போது, உதயன் நிர்வாகம் சார்பாக நீதிமன்றத்தில் எவரும் பிரசன்னமாக இருக்கவில்லை. இந்நிலையில், உதயன் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் இவை தொடர்பில் உதயன் நிர்வாகியுடன் கதைத்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த வழக்குகளின் விசாரணைகள் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.