இருளில் மூழ்கும் மானிப்பாய் நகரம்

Street_Lampமானிப்பாய் நகரத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிராமல் உள்ளதாகவும் இது தொடர்பில் வலி தென்மேற்கு பிரதேச சபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுதுமலைச் சந்தியில் இருந்து மருதடிப் பிள்ளையார் கோயில் சந்தி வரையான 1.5 கிலோமீற்றர் நீளமான வீதியில் 25ற்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. ஓன்றிரண்டு மின்விளக்குகளைத் தவிர ஏனையவை ஒளிர்வதில்லை.

நகரத்தில் உள்ள வர்த்த நிலையங்கள் மூடும் வரை நகரம் வெளிச்சத்துடன் காணப்படுவதாகவும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட பின்னர் இருளில் மூழ்குவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைத் தலைவர் ஜெபனேசனிடம் கேட்டபோது கடந்த பெருமழை காரணமாக பெருமளவான மின்குழிழ்கள் பழுதடைந்துள்ளதாகவும் அவ்வாறு பழுதடைந்துள்ள மின்குமிழ்களுக்கு பதிலாக புதிய மின்குமிழ்கள் பொருத்துவதற்கு மின்சார சபையிடம கோரியுள்ளதாகவும் விரைவில் அதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts