தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அனைத்து சொத்துக்களையும் இராணுவ உடைமையாக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் மாவீரர் மயானங்களாக இருந்த காணிகள், பயிற்சிக்காக பயன்படுத்திய இடங்கள், வீடுகள் என்பவற்றை அரச உடைமையாக்குவதற்கான நடவடிக்கை பாதுகாப்புச் செயலரின் உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புலிகளுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அச்சகங்கள், வாகனங்கள், நிலையான வங்கி வைப்புகள் என்பன அரச உடைமையாக்கப்பட்டடிருந்தன.
இந்த நிலையில் புலிகள் பயன்படுத்திய காணிகள், வீடுகள் என்பவற்றை இராணுவ உடைமையாக்க கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.
ஏற்கனவே யாழ். மாவட்டத்தில் கோப்பாய், கொடிகாமம், எள்ளன்குளம் மாவீரர் மயானங்களில் படையினர் முகாம் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.