கச்சதீவு பகுதியில் மலசலகூடங்களை அமைப்பதற்கு ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபா நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளதாக நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் தானியெல் றெக்சியன் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு பகுதியிலுள்ள அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகின்ற பக்தர்கள் போதியளவான மலசலகூட வசதிகளின்றி சிரமத்தை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
இந்நிலையிலேயே பக்தர்களின் நன்மை கருதி கச்சதீவு பகுதியில் 100 மலசலகூடங்களை அமைப்பதற்கு நெடுந்தீவு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இம்மலசலகூடங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.