கடற்படையினரின் ஏற்பாட்டில் விசேட கண்மருத்துவ முகாம்

eye-testingகடற்படை மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் யோன் கில்ட் கோல்டின் நிறுவனத்தின் விசேட கண்மருத்துவ முகாம் ஒன்று நெற்று வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் நடைபெற்றுள்ளது.

நேற்று காலை 10 மணிக்கு இந்த மருத்துவ முகாமை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா மற்றும் வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் உடவத்தை ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

நெடுந்தீவு வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் விசேட கண் பரிசோதனைகளும் மூக்கு கண்ணாடி வழங்கலும் இடம்பெற்றுள்ளது.

இந்த கண் மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதுடன் இன்றைய தினமும் இந்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மருத்துவ முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிராந்திய சுகாதா பிரதேச சேவைகள் பணிப்பாளர் எஸ்.கேதீஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா மற்றும் கடற்படை அதிகாரிகள், பிரதேச சபைத் தவிசாளர் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts