படையினருக்கும் பொலிஸாருக்கும் மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு

Human_rightsயாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்கும் பொலிஸாருக்கும் மனித உரிமைகள் தொடர்பான இருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், படையினருக்கு பலாலி படைத் தலைமையகத்தில் நேற்று முன்தினமும், பொலிஸாருக்கு யாழ். பொது நூலகத்திலும் மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்குகள் நேற்றும் நடைபெற்றன.

மனித உரிமைகள் தொடர்பில் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகளை அடிப்படையில் பாதுகாப்பதில் பொலிஸாருக்கும், படையினருக்குமான பொறுப்பும், கடமைகளும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரம் செயற்பாடுகளும், சித்திரவதை மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான விளக்கங்களும், கருத்துரைகளும் வழங்கப்பட்டன.

இக்கருத்தரங்கில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஆர்.பி.பிரியந்த பெரேரா உட்பட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் (சட்டம்) சட்டத்தரணி நிமால் ஜி புஞ்சிஹேவா, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலய விசாரணை அதிகாரி பௌமி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பிரியதர்ஷன ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

அத்துடன், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண, யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திலகரட்ண உட்பட பொலிஸ் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts