ஏ9 பாதையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பார்: வட மாகாண ஆளுநர்

chandrasiriஏ-9 பாதையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

யாழ் கல்வி வலயத்தில் திறமையான சித்திகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் 15 ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கு மீளவும் பால் வழங்கும் திட்டத்தையும், ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வு நாடுபூராகவும் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒவ்வொரு தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

யாழ் கல்வி வலயத்தின் கலாச்சார நிகழ்வும் விருது வழங்கும் வைபவமும்

Related Posts