நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் தம்மைப் பதிவு செய்யுமாறு கிராம சேவையாளர்கள் ஊடாக விண்ணப்பித்துள்ளனர்.
நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள மக்கள் அடாத்தாக குடியேறியுள்ளனர்.
இவர்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் தாங்கள் தங்கியுள்ள காணிகளில் சட்டவிரோதமாக நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன்போது நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களும் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யுமாறு கோரி கிராம சேவையாளர்களிடம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று விண்ணப்பித்துள்ளனர்.
நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்குக் குடும்ப அட்டை என்பன வழங்கப்படவில்லை. அத்துடன் தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் சிங்கள மக்கள் வசிக்காத நிலையிலேயே அவர்கள் இவ்வாறு வாக்காளர் பதிவுக்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.