ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த போது அதன் கயிறு இறுகி சிறுமியொருவர் பலியான சம்பவமொன்று உரும்பிராய் மேற்கு அன்னங்கை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த 14 வயதான காந்தன் உசாளினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த வேளை அதன் சிறுமியின் கயிறு கழுத்தில் சிக்கியுள்ளது. சிறுமியை உடனடியாக மீட்டெடுத்த முச்சக்கரவண்டியில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.