காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் இன்றி பொருட்கள் விற்பனை செய்த 26 வர்த்தகர்களுக்கு யாழ். நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக பாவணையாளர்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் தெரிவித்தார்.
யாழ். நகரப் பகுதியில் குறிப்பாக ஆஸ்பத்திரி வீதி, நாவலர் வீதி, காங்கேசன்துறை வீதி, திருநெல்வேலி பகுதியில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை பரிசிலனை மேற்கொண்ட வேளை, 30 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வர்த்தகர்களுக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வேளை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத 17 வர்த்தகர்களுக்கு தலா 1000 ஆயிரம் படி 17,000 ரூபாவும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 7 வர்த்தகர்களுக்கு 10 ஆயிரம் ரூபா படி 70 ஆயிரம் ரூபாவும், பொதி செய்யப்பட்ட பொருட்களுக்கு உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதி குறிப்பிடப்படாத வர்த்தகர்கள் இருவருக்கு தலா 2500 ரூபா வீதம் 5000 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், நீதிமன்றிற்கு சமூகமளிக்காத நான்கு வர்த்தகர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.