பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 25ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு தன்னை அழைத்ததாகவும் அவர் கூறினார்.
உடல் நலக்குறைவு காரணமாக தன்னால் அன்றையதினம் விசாரணைக்கு செல்ல முடியவில்லை எனவும் எதிர்வரும் ஜுன் மாதம் இந்த விசாரணைக்கு வருவதாக தான் கூறியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.