யாழ்ப்பாண குடாநாடு வெசாக் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது

vesake1“2009 ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்தபின் வெசாக் கொண்டாட்டங்கள் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியான சூழலில் கொண்டாடப்படுகின்றது. வெசாக் கூடுகளையும் வெளிச்ச அலங்காரங்களையும் பார்ப்பதிலும் புத்த பெருமானின் வரலாறுகளை அறிவதிலும் தமிழர்கள் ஆர்வமாக உள்ளார்கள். விசேடமாக வரலாற்று குறிப்புகள் தழிழ் மொழியிலும் காண்பிக்கப்படுகின்றன.”

பாதுகாப்பு படையினராலும் யாழ் மக்களாலும் இணைந்து வெசாக் தினம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் இருபதிற்கும் மேற்பட்ட வர்ண அலங்கார கூடங்கள் இம்முறை யாழ் நகரை அலங்கரித்தன. பரந்த எண்ணிக்கையான கவர்ச்சிகரமான விளக்குகளும் யாழ் நூலகத்தின் முன்பாகவும் துரையப்பா விளையாட்டரங்கிலும் அமைக்கப்பட்டு இருந்தன. இலங்கை இராணுவத்தினர் இப்பகுதியினை வெசாக் வலயமாக பிரகடனம் செய்திருந்தனர். அத்துடன் உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் என்பன பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் ஜிஏ சந்திரசிறி மற்றும் திருமதி ஜிஎன். சந்திரசிறி ஆகியோர் முதல் நாள் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

வெசாக் வலயம் நிறுவதற்கான வழிகாட்டலை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வழங்கியிருந்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெளத்த சங்கம் மிகவும் வெற்றிகரமான முறையில் இந்த நிகழ்வு நடைபெற தங்கள் ஆதரவை வழங்கியிருந்தது.

Related Posts