யாழில் இராணுவக் குடியிருப்பு அமைக்கப்பட உள்ளது!- ஜகத் ஜயசூரிய

Jagath_Jayasuriya_armyயாழ்ப்பாணத்தில் இராணுவக் குடியிருப்பொன்று அமைக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் இராணுவ முகாம்களில் மூன்றைத் தவிர்ந்த ஏனைய முகாம்கள் அகற்றிக்கொள்ளப்பட உள்ளது. ஏனைய முகாம்களை அகற்றி குறித்த இராணுவக் குடியிருப்பில் இந்த முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

அகற்றிக் கொள்ளப்படும் இராணுவம் முகாம்கள் அமைந்துள்ள காணிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள். பலாலி பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள இந்த இராணுவ குடியிருப்பில் முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

இதனால் காணிகளை இழக்கும் மக்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படும்.

இராணுவ முகாம்கள் அகற்றிக் கொள்ளப்படும் பிரதேசங்களின் சட்டம் ஒழுங்கு நிலைமை முழுமையாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related Posts