ஆலய வருமானத்தி​ல் ஏழைகள் நல்வாழ்விற்கு பயன்படுத்துமாறு கோரிக்கை

cash-money-paymentயாழிலுள்ள ஆலயங்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

யாழ் எயிட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உதவிகள் மனிதர்களை சோம்பேறிகள் ஆக்கக்கூடாது. ஒருவரின் தேவையை அறிந்து அவருக்கு ஏற்ற உதவியைச் செய்யவேண்டும்.

மதம் மனிதனுக்கு இன்றியமையாததாக இருப்பினும், வறுமையும் மனிதனது அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையில் கோயில்களுக்கு பலகோடிப்பணம் செலவிடப்படும் நிலை மாறவேண்டும்.

யாழ் எயிட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட உதவிகள் ஏழை மாணவர்களின் கல்வி நிலை உயர உதவியாக இருக்கும். இந்த உதவிகளைப் பெற்ற மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து கல்வியில் முன்னேற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts