மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படவுள்ள நிலையில், ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இரண்டு பிரதான இன சமூகங்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு எட்டப்படும் வரையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தை சற்றே ஒத்தி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர், இந்த அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே புரிந்துணர்வு ஏற்படும் வரையில் அதிகாரங்கள் தொடர்பான தீர்மானத்தை ஒத்தி வைப்பது பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், வடக்கில் மாகாணசபையை அமைப்பதானது தனது அரசியல் கனவு எனவும், தேர்தல்களை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.